திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது...!

திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.

Update: 2023-08-17 03:02 GMT

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்று அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.

சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் 3 கூண்டுகளை அமைத்தனர். இந்த கூண்டில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை பிடிபட்டுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்