பிரதமர் மோடி தலைமையில் இன்னும் 25 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி புரியும்-மந்திரி நாராயணகவுடா பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் இன்னும் 25 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி புரியும் என்று மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 18:45 GMT

சிவமொக்கா: பிரதமர் மோடி தலைமையில் இன்னும் 25 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி புரியும் என்று மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

மந்திரி நாராயணகவுடா பேட்டி

சிவமொக்காவில் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் கலந்துகொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரியும், விளையாட்டுத்துறை மந்திரியுமான நாராயணகவுடா கலந்துகொண்டார். இதற்கிடையே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேறு கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தால் அதனை ஆபரேஷன் கமலா என்று கூறுகிறார்கள். நானும் வேறொரு கட்சியில் இருந்துதான் பா.ஜனதாவுக்கு வந்தேன்.

அந்த கட்சியில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததால் விலகி பா.ஜனதாவில் இணைந்தேன். பா.ஜனதாவில் கட்சியின் கொள்கை மீது நம்பிக்கை வைத்து இணைந்தேன். அப்படித்தான் பலரும் இணைந்தார்கள். இது எப்படி ஆபரேஷன் கமலா ஆகும்?.

இன்னும் 25 ஆண்டுகள்...

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்னும் 25 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி புரியும். நான் கட்சியில் சேர்ந்தபோது எடியூரப்பா, முதல்-மந்திரியாக இருந்தார். தற்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார். சிவமொக்கா மாவட்டத்தில் ஏற்படும் கலவரங்கள், பதற்றமான சூழல் குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் பேசியுள்ளேன். மராட்டியத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற எடுக்கும் முடிவுகளை இங்கேயும் எடுக்க அறிவுறித்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்