ஆந்திரா: ஸ்ரீ கங்கா பவானி கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்
பாதியத்திரை மேற்கொண்டபோது ஆந்திராவில் அதோனியில் உள்ள உள்ள கங்கை பவானி கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை அங்கிருந்து கேரளா சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது.கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி ,தற்போது ஆந்திராவில் பாதியத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று பாதியத்திரை மேற்கொண்டபோது ஆந்திராவில் அதோனியில் உள்ள உள்ள கங்கை பவானி கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.