ஆந்திரா - 11 இலங்கை மீனவர்களை கைது செய்தது இந்திய கடற்படை

காக்கிநாடா அருகே இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Update: 2022-11-13 15:43 GMT

ஆந்திரா,

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படை கைது செய்துள்ளது.இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்