பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு
பண்ட்வால் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
மங்களூரு-
சிக்கமகளூருவை சேர்ந்தவர் யசோதரா (வயது25). இவரது நண்பர் அவினாஷ். இவர்கள் 2 பேரும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் அவினாஷ், யசோதரா ஆகியோர் பெல்தங்கடியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அதிகாலை 3.30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை யசோதரா ஓட்டினார். அவர்கள் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு கைகம்பா தளப்பாடியில் அருகே வந்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது.
இதில் 2 பேரும் பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யசோதரா பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அவினாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மெல்கார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.