குஜராத் சட்டசபை தேர்தலில் 'முந்தைய சாதனைகளை முறியடிப்போம்' அமித்ஷா நம்பிக்கை

இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது

Update: 2022-11-15 18:39 GMT

ஆமதாபாத்,

குஜராத் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது. எனவே மனுதாக்கலின்போது அவரும் கலந்து கொண்டார்.

அப்போது அமித்ஷா கூறும்போது, "குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும். இங்கு மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம். அதிக ஓட்டுகள் வாங்குவோம்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்