மணிப்பூர் வன்முறை எதிரொலி: அமித்ஷா அசாம் பயணம் ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை எதிரொலியாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அசாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-05-08 21:46 GMT

கோப்புப்படம்

கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 11-ந் தேதி அசாம் மாநிலத்துக்கு செல்வதாக இருந்தது. அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அரசின் 2 ஆண்டு நிறைவு விழாவில் அவர் பங்கேற்க இருந்தார். அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆயிரம் பேருக்கு அவர் நியமன கடிதங்களை வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அவரது அசாம் பயணம் 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷா தன்னை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்ததாக ஹிமந்த பிஸ்வா சர்மா நிருபர்களிடம் கூறினார்.

மணிப்பூர் கலவர பிரச்சினையை கவனிப்பதில் அமித்ஷா தீவிரமாக இருப்பதால் அசாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்