கர்நாடக நில முறைகேடு தடை சட்டத்தில் திருத்தம்- மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

கர்நாடக நில முறைகேடு தடை சட்டத்தில் திருத்தம் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-25 16:40 GMT

பெங்களூரு: போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடக நில முறைகேடு தடை சட்டத்தில் திருத்தம் செய்ய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. மக்கள் நீண்ட நாளாக முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. இது கிராமப்புற விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக மிகச்சிறிய, சிறிய விவசாயிகள், சாமானிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் வழக்கு விசாரணைக்காக பெங்களூருவில் உள்ள கோர்ட்டுக்கு அலைய வேண்டி இருக்கிறது. இந்த சட்டத்திருத்தால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இதற்கு ஒப்புதல் வழங்கிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்