பன்னரகட்டாவில் 100 படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு-கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ. தகவல்

பன்னரகட்டாவில் 100 படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-18 18:45 GMT

ஆனேக்கல்:

பெங்களூரு புறகர் ஆனேக்கல் தாலுகா கல்லுபாலு கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட மகாந்தலிங்கபுராவில் கலெக்டர் தலைமையிலான கிராம தங்கல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா கலந்து கொண்டார். மேலும் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிகினி பகுதியில் சாலை, குடிநீர் மற்றும் போலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கட்டப்பட்டு வரும் வீடுகளில் 50 சதவீதம் உடனே பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணாவிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும் பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகள் கட்டி கொண்டு உரிமை பத்திரம் வாங்காமல் இருந்த 39 குடும்பங்களுக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 87 மாற்று திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் கிடைத்துள்ளது.

அதேபோல தாழ்த்தப்பட்டோர் மற்றம் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகை 35 பேருக்கு கிடைத்துள்ளது. இதேபோன்று பல்வேறு நலத்திட்டப்பணிகள் கிராம தங்கல் நிகழ்ச்சியின் மூலம் மக்களை சென்றடைகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பன்னரகட்டாவில் 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரிகள் கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி மூலம் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்