நடுவானில் விமான ஊழியரை தாக்கிய பயணி - லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கம்

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டது

Update: 2023-04-10 06:16 GMT

டெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமான புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவர் விமான ஊழியர்களை தாக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் விமானியிடம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர், விமான ஊழியர்களை தாக்கிய பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், விமான ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், எஞ்சிய பயணிகளுடன் விமானம் டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்