அதிமுக பொதுக்குழு வழக்கு: 3-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை- ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்

இந்த வழக்கில் 3-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. 12 மணியளவில் விசாரணை தொடங்கியதும் ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

Update: 2023-01-06 07:13 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இரண்டு நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கில் 3-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. 12 மணியளவில் விசாரணை தொடங்கியதும் ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்