மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்; தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர் - வைரல் வீடியோ
மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் நடந்து சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் கீர்த்தி நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் மெட்ரோ ரெயில் புறப்பட்டது.
ஷதிபூர் பகுதிக்கு ரெயில் சென்றபோது மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் நடந்து வருவதை ரெயில் ஓட்டுநர் கவனத்துள்ளார். இதையடுத்து, மெட்ரோ ரெயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றினர். பின்னர், அந்த இளம்பெண்ணை டெல்லி மெட்ரோ ரெயில் போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, ரெயில் தண்டவாளம் போன்ற தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.