அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
புதுடெல்லி,
அதிமுகவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக வழக்கை 15 ஆம் தேதி (இன்று) தள்ளி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.