கூடுதல் விமான கட்டணம்: ரெயில்கள் தேவை அதிகரிப்பு

கூடுதல் விமான கட்டணத்தால் ரெயில்கள் தேவை அதிகரித்துள்ளது.

Update: 2022-08-18 21:28 GMT

பெங்களூரு: நவராத்திரி, துர்கா பூஜை பண்டிகைகளை முன்னிட்டு விமானங்களில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோரும் அந்த கூடுதல் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாக பெங்களூருவாசிகள் கூறுகின்றனர்.

தொடர் விடுமுறையையொட்டி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைவாக செல்வதற்கு விமானங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது எதிரொலியாக மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் தற்போது ரெயில் தேவை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்