பிரபல நடிகை, ம.பி. பாஜக தலைவி ஆம் ஆத்மியில் இணைந்தனர்...!
பிரபல நடிகை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
டெல்லி,
பீகாரின் போஜ்புரி மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்பவ்னா செத். இவர் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் ஆம் ஆம்தி மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பகத் முன்னிலையில் நடிகை சம்பவ்னா செத் ஆம் ஆத்மியில் இணைந்தார்.
நடிகை சம்பவ்னாவுடன் மத்தியபிரதேச பாஜக தலைவி உஷா கோலும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.