சட்டவிரோத குடியிருப்புகள் மீது நடவடிக்கை

உயர் மின் அழுத்த கம்பிகளில் செல்லும் பாதையில் சட்டவிரோத குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Update: 2023-01-22 21:07 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் நாளுக்கு நாள் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக பெங்களூரு வருபவர்கள் வாடகை வீடுகள், குடியிருப்புகளில் தங்குகின்றனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயரமான வீடுகள் அருகே மின்துறையின் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதுபோன்ற மின்கம்பிகளில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் பாதையில் சட்டவிரோதமாக குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன. அந்த புகார்களின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெங்களூருவில் உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் பாதையில் உள்ள குடியிருப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அதன்படி சட்டவிரோதமாக மின்கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இனியாரும் இதுபோன்ற பகுதிகளில் குடியிருப்புகள் கட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்