கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 5 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-05 07:11 GMT

பெங்களூரு ,

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சோதனை நடைபெற்று வருகிறது.

சாமரன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஜமீர் அகமது கான் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்குச் சொந்தமான 5 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சோதனை நடத்தி வருகிறது.

பெங்களூரு கண்டோன்மென்ட்டில் உள்ள அவருடைய வீடு, சில்வர் ஓக் அடுக்குமாடி குடியிருப்பு, சதாசிவ நகரில் உள்ள விருந்தினர் மாளிகை, பனசங்கரியில் உள்ள ஜிகே அசோசியேட்ஸ் அலுவலகம், கலாசிபாளையாவில் உள்ள நேஷனல் டிராவல்ஸ் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கர்நாடக முன்னாள் முதல்மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளரும் ஆவார். 

அவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ஐஎம்ஏ வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பு சோதனை நடத்தியது. ஐஎம்ஏ மோசடியில் 40,000 முதலீட்டாளர்கள் நிறுவனர் முகமது மன்சூர் கானால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்