கர்நாடகத்தில் வாரிய தலைவர்கள் நியமனம் திடீர் ரத்து- கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் வாரிய தலைவர்கள் நியமனம் திடீரென ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கர்நாடக அரசில் பல்வேறு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களின் நியமனத்தை ரத்து செய்து திடீரென அரசு உத்தரவிட்டுள்ளது.
52 வாரியங்களின் தலைவர்களின் பதவி பறிபோய் உள்ளது. கர்நாடக மதுபான வாரிய தலைவரான நடிகை சுருதியின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.