வீட்டில் விபசாரம் நடத்திய இளம்பெண் கைது
மைசூருவில் வீட்டில் விபசாரம் நடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவர் பலரை தனது வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்ததும் அம்பலமாகி உள்ளது.
மைசூரு:-
வீட்டில் விபசாரம்
மைசூரு டவுன் விஜயநகர் 4-வது ஸ்டேஜ் பகுதியில் வீட்டில் விபசாரம் நடப்பதாக விஜயநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விபசாரம் நடத்திய சவிதா என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் கைதான சவிதாவிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பலரிடம் பணம் பறிப்பு
அதாவது, பிரியப்பட்டணாவை சேர்ந்த சவிதா, தனது கணவருடன் மைசூரு விஜயநகர் பகுதியில் தங்கி இருந்து வந்தார். மேலும் சவிதா பலருடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு வாட்ஸ்-அப்பில் பேசி வந்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி வந்த சவிதா, அவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். பணத்தை திரும்ப கேட்பவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தனது நிர்வாண படங்களை அனுப்பி வைத்து, அவர்களை மிரட்டி வந்துள்ளார்.
மேலும் வசதி படைத்தவர்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து, அதனை காண்பித்து அவர்களை மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளார். இதனை அறிந்த சவிதாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அந்தப்பகுதியில் தனியாக வீடு எடுத்து சவிதா விபசாரம் நடத்தி வந்துள்ளார். மேலும் பலரை தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் பணமும் பறித்து வந்ததும் தெரியவந்தது.
கைதான சவிதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.