இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர்
சிக்பள்ளாப்பூர் அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் மீது இளம் பெண் சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
கோலார் தங்கவயல்:-
காதலி கர்ப்பம்
சிக்பள்ளாப்பூர் தாலுகா இட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வனிதா (வயது 24). அதேபோல சிக்ககிரும்பி கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் (26). இவர்களில் வனிதா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதேபோல சேத்தன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்தநிைலயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.
அப்போது சேத்தன், வனிதாவிடம் திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் வனிதா கர்ப்பமானார். இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. அதே நேரம் கர்ப்பத்தையும் மறைக்க முடியவில்லை. இதனால் வனிதா, சேத்தனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.
ஆனால் அவர் கேட்டகவில்லை. இதையடுத்து வனிதாவின் பெற்றோர், சேத்தனிடம் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அதற்குள் சேத்தன் மறுத்துவிட்டார்.
காதலன் மீது தாக்குதல்
இதையடுத்து இந்த விவகாரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சங்க நிர்வாகிகளிடம் எடுத்து செல்லப்பட்டது. அவர்கள் வனிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டனர். அதன்படி சம்பவத்தன்று சேத்தன் மற்றும் வனிதாவை அழைத்து, சங்க நிர்வாகிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேத்தன், வனிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அனைவர் முன்பு கூறினார். இதைகேட்டு கோபமடைந்த வனிதா, அனைவர் முன்னிலையிலும் சேத்தனை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சேத்தனுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதையடுத்து நிலமையை உணர்ந்த சேத்தன் பின்னர், அனைவர் முன்னியிலும் வனிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து அவர்கள், பெற்றோர் முன்னிலையில்
2 பேருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து மணமக்களை வாழ்த்தி, அனுப்பி வைத்தனர்.
வீடியோ வைரல்
இதையடுத்து சேத்தன், வனிதாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இதற்கிடையில் சேத்தன் மீது காதலி வனிதா நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த பலர் காதலியை ஏமாற்ற நினைக்கும் ஆண்களுக்கு இந்த வனிதாவின் செயல் ஒரு பாடமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.