தத்தா குகைக்கோவிலில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சார்பில் மாலை அணியும் நிகழ்ச்சி

அடுத்த மாதம் 7 முதல் 13-ந் தேதி வரை தத்தா குகைக்கோவிலில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சார்பில் மாலை அணியும் நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2022-10-12 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு அருகே சந்திர திரிகோணமலை பாபாபுடன்கிரி மலையில் தத்தா குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்து, முஸ்லிம் மதத்தினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமசேனை தொண்டர்கள் சார்பாக தத்தா மாலை அணியும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டு அடுத்த மாதம்(நவம்பர்) 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தத்தா மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுபற்றி ஸ்ரீராம சேனையின் மாநில செயலாளர் கங்காதர குல்கர்னி சிக்கமகளூருவில் தெரிவித்ததாவது:-

ஸ்ரீராமசேனை அமைப்பினர் சார்பில் தத்தா மாலை அணியும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.

13-ந்தேதி சிக்கமகளூரு நகரில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி ஆன்மிக சொற்பொழிவு நடத்திவிட்டு அங்கிருந்து தத்தா குகை கோவிலுக்கு சென்று பாத தரிசனம் செய்யப்படும். ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இதேபோல் தத்தா குகைக்கோவிலை இந்துகளிடம் நிரந்தரமாக ஒப்படைக்க வேண்டும். இந்து அர்ச்சகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்