குந்துகோல் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி பலி

குந்துகோல் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி பலியானார்.

Update: 2022-10-19 19:00 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா பசுபதிகாலா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் தேவேந்திரப்பா படிகேர் (வயது 30). கூலி தொழிலாளி. இந்த நிலையில் பிரவீன் நேற்றுமுன்தினம் குந்துகோலுக்கு வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதில் அவர் மழையில் நனைந்த படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது குந்துகோல் அருகே உள்ள சம்சி கிராம பகுதியில் வந்தபோது, அவரை மின்னல் தாக்கியுள்ளது.

அதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து குந்துகோல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்