மாயமானதாக தேடப்பட்ட நிலையில் போலீசில் ஆஜர்: 3 குழந்தைகளை உதறிவிட்டு காதலனுடன் சென்ற பெண்

மாயமானதாக தேடப்பட்ட நிலையில் 3 குழந்தைகளின் தாய் போலீஸ் நிலையத்தில் தனது கள்ளக்காதலனுடன் ஆஜரானார். போலீசார் சமாதானப்படுத்தியும் அவர் தனது குழந்தைகள், கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்றுவிட்டார்.

Update: 2022-10-28 22:08 GMT

கொள்ளேகால்: மாயமானதாக தேடப்பட்ட நிலையில் 3 குழந்தைகளின் தாய் போலீஸ் நிலையத்தில் தனது கள்ளக்காதலனுடன் ஆஜரானார். போலீசார் சமாதானப்படுத்தியும் அவர் தனது குழந்தைகள், கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்றுவிட்டார்.

கள்ளக்காதல்

சாம்ராஜ்நகர் (மாவட்டம்) தாலுகா சிவனசமுத்திரா அருகே ஹுகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீர் அகமது. இவரது மனைவி தபசம்(வயது 26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாபாரியான முனீர் அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தபசமுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அப்ரார்(24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதுபற்றி அறிந்த முனீர், இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர்.

கணவரை உதறிவிட்டு...

இந்த நிலையில் தபசம், தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளை உதறிவிட்டு கடந்த 17 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதுபற்றி முனீர் கொள்ளேகால் புறநகர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவி, அவளுடைய கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும், இருவரையும் கண்டுபிடித்து தருமாறும் கோரியிருந்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தபசம், தனது கள்ளக்காதலன் அப்ராருடன் கொள்ளேகால் புறநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது தான் தன் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்றும், தனது கணவர் மற்றும் குழந்தைகள் தனக்கு வேண்டாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பரபரப்பு

போலீசார் எவ்வளவோ அறிவுரை வழங்கியும் தபசம் கேட்கவில்லை. அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் விவாகரத்து பெறாமல் நீங்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அறிவுரை வழங்கினர். அதை ஏற்ற தபசம் தான் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு தன்னுடைய கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் இருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்