அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது
ராமநகர் அருேக அட்டகாசம் ெசய்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி ெசலுத்தி வனத்துைறயினர் பிடித்தனர்.
ராமநகர்: ராமநகர் அருேக அட்டகாசம் ெசய்து வந்த காட்டு யானையை மயக்க ஊசி ெசலுத்தி வனத்துைறயினர் பிடித்தனர்.
காட்டு யானை அட்டகாசம்
ராமநகா் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், சென்னப்பட்டணாவை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக விவசாயிகளின் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வந்தது.
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிர் இழந்திருந்தார். இதையடுத்து, காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினத்தில் இருந்து காட்டு யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக வளர்ப்பு யானைகளான பிரசாந்த், லட்சுமண், குமார் உள்ளிட்ட 5 யானைகள் மூலமாக தேடும் பணி நடைபெற்றது.
மயக்க ஊசி ெசலுத்தி பிடிக்கப்பட்டது
இந்த நிலையில், நேற்று காலையில் சென்னப்பட்டணா அருகே பீதிஹள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஒரு காட்டு யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதனால் அந்த யானை மயக்கம் போட்டு விழுந்தது. சில மணிநேரம் கழித்து அந்த காட்டு யானையை, வளர்ப்பு யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
32 வயது யானை
அந்த யானைக்கு 32 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளேகால் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் மற்றொரு யானையை பிடிக்கும் பணிகளும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.