கேரளாவில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து

கேரளாவின் எர்ணாக்குளத்தில் இருந்து வாளையாறு வழியாக கார்பன் டை ஆக்சைடு ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானது.

Update: 2023-04-27 12:40 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து வெண்மை நிற வாயு வெளியேறுவதை கண்ட மக்கள் பதற்றம் அடைந்தனர். நான்கு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தினர். இதனால் அந்த பகுதிய்ல் சற்று பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்