உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை

கோழி குழம்பை காலி செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-05 18:45 GMT

மங்களூரு:-

தகராறு

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா குத்திகார் அருகே மொக்ரா பகுதியை சேர்ந்தவர் சிவராம் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சிவராமின் தந்தை சீனா. கூலி தொழிலாளி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராமின் வீட்டில் கோழி குழம்பு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மீதம் இருந்த கோழி குழம்பை சீனா முழுவதும் சாப்பிட்டு காலி செய்ததாக தெரிகிறது.

அப்போது கோழி குழம்பை காலி செய்ததால் சிவராமிற்கும், சீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

கொலை

அப்போது ஆத்திரமடைந்த சீனா, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து மகன் என்றும் பாராமல், சிவராமை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவராம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுப்பிரமணியா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசாார் கொலையான சிவராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோழி குழம்பை காலி செய்ததால் ஏற்பட்ட தகராறில் மகன் என்று கூட பாராமல் சிவராமை சீனா உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனாவை கைது செய்தனர்.

மேலும் அவாிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி

உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்