தூங்கி கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படம் எடுத்து நின்ற பாம்பு... வைரலான வீடியோ

தூங்கி கொண்டிருந்த பெண்ணின் முதுகில் ஏறி படம் எடுத்து பாம்பு ஒன்று நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-08-29 08:16 GMT



புதுடெல்லி,



பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று பழங்காலத்தில் கூறுவார்கள். எதிரி நாட்டை வெல்ல போர் தொடுத்து செல்லும் அரசனின் படையினர் கூட பாம்பு ஒன்றை பார்த்து விட்டால் அச்சத்தில் அலறி நாலாபுறமும் ஓடுவார்கள் என்ற பொருளில் கூறுவதுண்டு.

இந்தியாவில் ஒரு சில விஷ பாம்பு வகைகளில் ஒன்றான நாக பாம்பு ஒன்று, கட்டிலில் புரண்டு படுத்திருக்கும் பெண்ணின் முதுகு பக்கத்தில் இருந்து மேலேறி படம் எடுத்தபடி கொத்துவதற்கு தயாரான நிலையில் நிற்கிறது.

அது எந்த நேரத்திலும் தீண்டலாம் என்ற சூழலில், மர நிழலில் படுத்திருந்த பெண் மீது சிறிது நேரம் நின்று பார்த்தபடி இருக்கிறது. அருகே நின்றிருந்த கன்னு குட்டியும் அதனை கவனித்தபடி திகைத்து நிற்கிறது. ஆனால், இது எதனையும் அறியாமல் அந்த பெண் படுத்திருக்கிறார்.

இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எனினும், சில நிமிடங்களில் அது இறங்கி சென்று விட்டது என வீடியோவின் தலைப்பில் பதிவிடப்பட்டு உள்ளது ஆறுதல் ஏற்படுத்துகிறது.

இந்த வீடியோவை வன அதிகாரி சுசந்தா நந்தா தனது சமூக ஊடக பதிவில் வெளியிட்டு இந்த சூழலில், உங்களது பதில் வினை என்னவாக இருக்கும்? என கேட்டு உள்ளார். வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், நிச்சயம் வீடியோ எடுத்து, அதனை வைரலாக்க முயற்சிக்கமாட்டேன். இந்த வீடியோவை படமெடுத்த நபர் யாராக இருக்கும்? என்ற ஆச்சரியத்தில் இருக்கிறேன் என தெரிவித்து உள்ளர். மற்றொருவர், ஓம் நமசிவாய கூறி சரண் அடைந்து விடுவேன் என கூறியுள்ளார்.

வேறொருவரோ, எங்களிடம் கேட்பதற்கு பதில், நீங்கள் என்ன செய்வீர்கள்... உண்மையான கேள்வி, பதிலானது, ஒன்று செயல்பட வேண்டுமா? அல்லது அமைதியாகி விட வேண்டுமா? என இருக்க வேண்டும். இந்த விசயத்தில் எதுவும் செய்யாமல் இருப்பது சிறந்தது என தெரிவித்து உள்ளார்.

ஒருவர், நிச்சயம் இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து இருப்பேன் என சிரிப்பு எமோஜியையும் வெளியிட்டு உள்ளார். இதேபோன்று மற்றொரு நபர், கர்நாடகாவில் சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் சிவனின் நாமம் உச்சரித்து கொண்டு இருந்துள்ளார். அதிர்ஷ்டவசத்தில் பாம்பு தீங்கு செய்யாமல் சென்று விட்டது என தெரிவித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்