கர்நாடகா-மராட்டிய எல்லை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடகா-மராட்டிய எல்லைப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
உப்பள்ளி-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடகா-மராட்டிய எல்லைப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
எல்லைப்பிரச்சினை
உப்பள்ளியில் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியிலான ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கர்நாடகா-மராட்டிய மாநில எல்லை பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளது. இதுவரை 865 கிராமங்களை மராட்டிய அரசு ஆக்கிரமித்துள்ளது. அந்த கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
ஆனால் அவை அனைத்தும் கர்நாடகத்தில் உள்ள கிராமங்கள். அதை எப்படி நாம் விட்டு கொடுக்க முடியும். மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மராட்டிய மாநிலத்தில் கன்னடர்கள் வசித்து வரும் இடங்களை நாம் இதுவரை உரிமை கொண்டாடவில்லை. அப்படியிருக்கையில் கர்நாடகத்தில் மராட்டியர்கள் வசிக்கும் இடத்தை அவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும்.
ராஜினாமா செய்யவேண்டும்
மத்திய அரசுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்த வேண்டும். கர்நாடகத்தின் உரிமையை மீட்டு கொண்டுவர வேண்டும். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது.
மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மத்திய அரசிடம் பேசி ஏக்நாத் சிண்டே அரசை தூக்கி ஏறிய செய்யவேண்டும். ஏனென்றால் கர்நாடகத்தில் கன்னடர்களின் உரிமைதான் முக்கியம். கன்னடர்களின் மரியாதையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காப்பாற்ற வேண்டும். இல்லைெயன்றால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.