பெங்களூரு:-
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதன் மூலம் அமைதி, வளர்ச்சி, வளம் என்ற புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கர்நாடகத்தை மீண்டும் அதன் அடையாளத்துடன் கட்டமைப்போம். கன்னடத்தின் பெருமையை மீண்டும் மீட்டெடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு இன்றே முதல் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது பல்லாரி மாநகராட்சி மேயர்-துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அங்கு நிலை குழு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.