தெலுங்கானாவில் 18 ஆண்டுகளாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் முஸ்லிம் நபர்

தெலுங்கானாவில் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அடையாளம் ஆக முஸ்லிம் நபர் ஒருவர் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

Update: 2022-09-08 10:17 GMT

ஐதரபாத்,



தெலுங்கானாவின் ராம்நகர் பகுதியில் வசிப்பவர் முகமது சித்திக். தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அதன்மேல் பந்தல் அமைத்து, ஒளி விளக்குகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரமும் செய்துள்ளார்.

இதுபற்றி சித்திக் கூறும்போது, 18 ஆண்டுகளாக விநாயகர் சிலையை நான் பிரதிஷ்டை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற செய்தியை கூறவே இதனை செய்கிறேன்.

என்னுடைய நண்பர்களுக்கு கூட இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. அவர்கள் எங்களது மசூதிக்கு வருவார்கள். இப்தார் விருந்தில், இந்து நண்பர்களும் கலந்து கொள்வார்கள். இந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய அனைத்து அனுமதிகளையும் நான் பெற்றுள்ளேன். அன்னதானமும் செய்துள்ளேன்.

நான் நிறைய வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறேன். இந்த பகுதி மக்களும் என் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கின்றனர். 251 கிலோ எடையில் லட்டு வைத்திருக்கிறேன். மேலே அனுமன் மற்றும் கருடர்கள் பறக்கும்படி வடிவமைத்து இருக்கிறேன். 9-வது நாளில் சிலையை நாங்கள் கரைப்போம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்