பாகல்கோட்டை டவுனில் டீ-சர்ட்டுகள் இருந்த மூட்டைகளுடன் பா.ஜனதா பிரமுகரின் கார் பறிமுதல்

பாகல்கோட்டை டவுனில் டீ-சர்ட்டுகள் இருந்த மூட்டைகளுடன் பா.ஜனதா பிரமுகரின் கார் பறிமுதல்.

Update: 2023-05-09 20:23 GMT

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை (மாவட்டம்) டவுனில் பசவேஸ்வர் சர்க்கிள் அருகே பிரபு நாரா என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. தொழில் அதிபரான இவர் பா.ஜனதா வேட்பாளர் வீரண்ணா சாரந்தி மட்டுக்கு நெருக்கமானவர் ஆவார். இந்த நிலையில் அந்த குடோனில் நிறுத்தியிருந்த காரில் பெரிய மூட்டையில் டீசர்ட்டுகள் இருந்தன. இதை அறிந்த பாகல்கோட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு வினியோகிக்க டி-சர்ட் இருப்பதாகவும், அதனை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் காரை திறக்க பிரபு நாரா மறுத்தார். இதனால் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். நீண்ட நேர இழுபறிக்கு பிறகு போலீசார், காரின் கதவை திறந்து சோதனையிட்டனர். அப்போது மூட்டையில் டீசர்ட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அந்த டீ-சர்ட்டுகளில் 4 என்று பொறிக்கப்பட்டு இருந்தது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா வேட்பாளர் வீரண்ண சாரந்தி மட்டின் பெயர் 4-வது வரிசையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது சார்பில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க இந்த டீ-சர்ட்டுகள் காரில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறினர். இதையடுதத்து டீசர்ட்டுகளுடன் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்