தம்பதியிடம் ரூ.3 ஆயிரம் அபராதம் வசூல் - 2 போலீஸ்காரர்கள் பணியிடமாற்றம்

தம்பதியிடம் ரூ.3 ஆயிரம் அபராதம் வசூல் 2 போலீஸ்காரர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-02-03 20:40 GMT

பெங்களூரு:-

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராஜேஷ் மற்றும் நாகேஷ் ஆகிய 2 போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்தனர். மேலும், விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி என்பது தெரிந்தது. அப்போது இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் சுற்றித்திரிய கூடாது என போலீசார் கூறி உள்ளனர். மேலும், அதற்கு அபராதமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி அவர்களிடம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.

மேலும், அவர்கள் இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து ஒன்றை அவர்கள் பதிவிட்டனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி இருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக பெங்களூரு போலீசார் துறை சார்ந்த விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ்காரர்கள் ராஜேஷ் மற்றும் நாகேஷ் ஆகியோர் தம்பதியை மிரட்டி பணத்தை பறித்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்