'சீட் பெல்ட்' அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்- கர்நாடக அரசு உத்தரவு
‘சீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த விதிமுறைகளை மீறினால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
கர்நாடகத்தில் கார் ஓட்டுனர்கள் கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என்று விதிமுறை கூறுகிறது. அந்த விதிமுறையை மீறி 'சீட் பெல்ட்' அணியாத கார் டிரைவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் 'சீட் பெல்ட்' அணியாமல் கார் ஓட்டும் டிரைவர்களுக்கு அபராதத்தை கர்நாடக அரசு ரூ.1,000 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதி டிரைவர்களுக்கு மட்டுமல்லாமல், காரில் பயணிப்போருக்கும் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.