காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்; ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ஒசநகர் அருகே காட்டெருமை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Update: 2022-10-05 19:00 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மாகோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (வயது 45). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டிய தோட்டத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டெருமை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயம்மா அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது காட்டெருமை அவரை விரட்டி சென்று தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயம்மா கூச்சலிட்டார்.

அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த அவரது கணவர் நரசிம்மா, ஓடி வந்து காட்டெருமையை விரட்டியடித்து ஜெயம்மாவை மீட்டார். பின்னர் பலத்த காயம் அடைந்த ஜெயம்மாவை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். காட்டெருமை தாக்கியதில் ெஜயம்மாவுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமை நடமாட்டத்தால் பீதியடைந்துள்ள அந்தப்பகுதி மக்கள், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்