கோவிலுக்குள் விடாமல் சாதி பெயர் கூறி திட்டிய 8 பேர் மீது வழக்குப்பதிவு

தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை கோவிலுக்குள் விடாமல் சாதி பெயரை கூறி திட்டிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-08 17:23 GMT

மைசூரு:

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெக்கரே கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா. தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர், கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி பெக்கரே கிராமத்தில் உள்ள பாலச்சந்திர பசவேஸ்வரா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் மகாதேவாவை, கோவில் பூசாரி மற்றும் கோவிலில் இருந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்பட மொத்தம் 8 பேர், மகாதேவாவை கோவிலுக்குள் நுைழய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு மகாதேவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மகாதேவாவை ஆபாசமாக திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மகாதேவா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்த தலித் சமுதாய பிரமுகர்கள் மகாதேவாவை அழைத்துக்கொண்டு பெட்டதபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தலித் என்பதால் கோவிலுக்கு நுழையவிடாமல் அவரை சாதி பெயரை கூறி திட்டிய 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்