வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜஸ்தான் மந்திரி மீது வழக்கு பதிவு..!

வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜஸ்தான் மந்திரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-18 22:35 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் காங்கிரஸ் அரசில் கேபினட் மந்திரியாக இருப்பவர் மகேஷ் ஜோஷி.

தலைநகர் ஜெய்ப்பூரில் சுபாஷ் சவுக் பகுதியை சேர்ந்த ராம்பிரசாத் (வயது 38) என்பவர் அங்குள்ள ஒரு குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் பதிவு செய்த வீடியோவில், உள்ளூர் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான மகேஷ் ஜோஷி, ஓட்டல் உரிமையாளர் முஞ்ச் தங்க் உள்ளிட்டோர் தனது குடும்பத்துக்கு ஏராளமான தொல்லை கொடுத்ததால், இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ராம்பிரசாத்தின் சகோதரர், சுபாஷ் சவுக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்பிரசாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக மந்திரி மகேஷ் ஜோஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவருடைய குடும்பத்தினர் குடோன் முன்பு போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்