நிலத்தகராறில் தாக்கப்பட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி சாவு

நிலத்தகராறில் தாக்கப்பட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-11-25 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகரப்பா. வியாபாரியான இவருக்கு சிவனி எனும் கிராமத்தில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை அவர் வாடகைக்கு விடுவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் வீடு கட்டியதில் இருந்து, பக்கத்து வீட்டை சேர்ந்த உமேஷ் என்பவருக்கும் சேகரப்பாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இதில் உமேஷ், அவரது உறவினர் ஆகியோர் சேகரப்பாவை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சேகரப்பாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உமேஷ் மற்றும் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்