ஜம்முகாஷ்மீர்: எல்லை காவல்படை வீரர்கள் பயணம் செய்த பஸ் கவிழ்ந்து விபத்து - 6 வீரர்கள் உயிரிழப்பு

இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Update: 2022-08-16 07:12 GMT

ஜம்முகாஷ்மீர்,

ஜம்முகாஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில்  இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளானது .பஸ்சில் இந்தோ- தீபெத் எல்லை காவல் படை வீரர்கள் 37 பேர், ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 பேர் என மொத்தம் 39 வீரர்கள் பயணித்தனர்.

இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்,மேலும் பலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவீரமாக நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்