மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை சாவு

கெங்கேரி பகுதியில் நடந்ததுபோல், கே.ஆர்.பேட்டை பகுதியில் விளையாடி கொண்டிருந்த 1½ பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Update: 2023-03-15 18:45 GMT

பெங்களூரு:-

விளையாடியது

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினய். இவர் தனது மனைவி மற்றும் தீக்சி என்ற 1½ வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரது குழந்தை சம்பவத்தன்று வீட்டின் முதல் மாடியில் தரையில் அமர்ந்து விளையாடியது. அப்போது வினய் மற்றும் அவரது மனைவி வீட்டின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தனர்.

குழந்தை தனியாக விளையாடிய நிலையில், திடீரென அங்கிருந்த இரும்பி கம்பியை தாண்டியது. அப்போது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை, பெற்றோர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

மற்றொரு சம்பவம்

இதுகுறித்து சாம்ராஜ் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், விளையாடி கொண்டிருந்த குழந்தை, தவறுதலாக ஏறி குதித்தில் கீழே விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கெங்கேரி பகுதியை சேர்ந்த சிவப்பா என்பவரது 3 வயது மகன் ராகுல், விளையாடி கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. இந்த சோக சம்பவம் மறைவதற்குள், பெங்களூருவில் மற்றொரு குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்