போதைப்பொருள் வழக்கில் மேலும் 9 டாக்டர்களுக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் மேலும் 9 டாக்டர்களுக்கு ஜாமீன் வழங்கி தட்சிண கன்னடா மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-01 20:22 GMT

மங்களூரு:-

29 பேர் கைது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மற்றும் விற்பனை செய்ததாக கடந்த மாதம் (ஜனவரி) 22 டாக்டர்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது தட்சிண

கன்னடா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு ததட்சிண கன்னடா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இந்த வழக்கில் 13 டாக்டர்களுக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் 9 பேருக்கு ஜாமீன்

இந்த நிலையில் மேலும் 9 டாக்டர்களான விதுஷ் குமார், சரண்யா பிரபாகர், சித்தார்த் பவாஸ்கர், சூர்யஜித் தேவ், ஆயுஷா, பிரனய் நடராஜ், சைதன்யா, சுதீந்திரா, இஸ்மிட்டா ஆகியோர் ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திரா எம்.ஜோஷி, அவர்கள் 9 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதாவது, அவர்களின் பாஸ்போர்ட்டுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்