அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு

அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-05-29 06:40 GMT

லக்னோ,

அயோத்திக்கு சுற்றுலா வந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,

பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாகவும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறினர்.

மேலும்,பேருந்து டிரைவர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறினர்.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்