மேற்கு வங்காளத்தில் நிலக்கரி கொள்ளை வழக்கில் 7 பேர் கைது: சி.பி.ஐ. அதிரடி

ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிட் நிறுவனத்தின் குத்தகை சுரங்கங்களில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-07-14 23:42 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் அசன்சோலுக்கு அருகிலுள்ள குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிட் நிறுவனத்தின் குத்தகை சுரங்கங்களில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையால் ரூ.1,300 கோடி நிதி பரிவர்த்தனைகள் நடந்தது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பகுதி பல செல்வாக்கு மிக்க நபர்களுக்கு சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் மற்றும் ஓய்வு பெற்ற 3 பொது மேலாளர்கள் மற்றும் மேலாளர், 2 பாதுகாவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மேற்படி ஊழலில் இவர்களின் பங்களிப்பு இருந்தது தெரியவந்துள்ளதை தொடர்ந்து நேற்று அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இந்த நிலக்கரி கொள்ளை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவி உள்ளிட்ட பிரபலங்களிடம் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்