அசாம், மேகாலயா உள்பட 4 மாநில சாலை பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி; மத்திய அரசு ஒப்புதல்

அசாம், மேகாலயா உள்பட 4 வடகிழக்கு மாநிலங்களின் சாலை திட்ட பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

Update: 2022-11-10 00:57 GMT



புதுடெல்லி,


வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச தரத்திலான சாலை இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்து நேற்றிரவு பேசினார்.

அவர் பேசும்போது, 2024-ம் ஆண்டுக்குள் வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த சாலை போக்குவரத்தின் நிலைமையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

இந்த பகுதியில் சர்வதேச தரத்திலான சாலைகளை அமைப்பது என்ற இலக்குகளை கொண்டுள்ளோம் என கூறினார். இதன்படி, இந்த மண்டலங்களில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மறுஆய்வு செய்து, அதனை தொடர்ந்து புதிய சாலை திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

அசாமுக்கு ரூ.50 ஆயிரம் கோடி, மேகாலயாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடி, நாகலாந்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி மற்றும் சிக்கிமுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்குவதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என கட்காரி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்