5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-08-03 22:14 GMT

புதுடெல்லி,

துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படைப்பிரிவுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 657 வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் நேற்று இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதில், கடந்த 2021-ம் ஆண்டில் 153 வீரர்களும், 2020-ல் 149 வீரர்களும், 2019-ல் 133 வீரர்களும், 2018-ல் 97 வீரர்களும், 2017-ல் 125 வீரர்களும் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்