இந்திய மீனவர்கள் 633 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர் - வெளியுறவுத்துறை தகவல்

இந்திய மீனவர்கள் 633 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

Update: 2022-07-01 10:00 GMT

புதுடெல்லி,

இந்தியா பாகிஸ்தான் இடையே 2008-ம் ஆண்டு போடப்பட்ட தூதரக ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் ஜனவரி-1 மற்றும் ஜீலை-1 ஆகிய தேதிகளில் என ஆண்டில் இருமுறை இரு நாடுகளும் தங்கள் வசமுள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்வர்.

அந்த வகையில், பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய கைதிகள் பட்டியல் மற்றும் இந்திய வசம் உள்ள பாகிஸ்தான் கைதிகள் பட்டியல் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகம் வழியாக பரிமாற்றப்பட்டது.

அதில் இந்திய சிறையில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் கைதிகளாக உள்ளனர். இதே போல் பாகிஸ்தான் அளித்துள்ள பட்டியலில் 49 இந்தியர்களும், 633 மீனவர்களும் கைதிகளாக உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தண்டனை முடிந்துள்ள 533 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்தியர்களை இந்தியா அனுப்பக்கூடிய பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்