கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.6,085 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.6,085 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் ஜி.எஸ்.டி.வரி வசூல் செய்வதில் ஒவ்வொரு மாதமும் முன்னிலை வகித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாகவும் ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பில் கர்நாடகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வரி வசூல் செய்வதை முடுக்கி விடுதல், பொருளாதாரத்தில் முன்னேற்றம், வரி செலுத்துவோரின் ஆர்வம் காரணமாக கர்நாடகத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் எந்த பிரச்சினையும் இன்றி நடக்கிறது.
கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜனவரி) ரூ.6,085 கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு வரி செலுத்துவோர், அதிகாரிகள் காரணமாகும். அவர்களால் தான் இது சாத்தியமானது. ஜி.எஸ்.டி. வரி வசூல் காரணமாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு உதவியாகவும், மக்கள் நல திட்டங்களை அறிவிக்க பயன் உள்ளதாகவும் இருக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.