மத்தியபிரதேசத்தில் இரு வேறு விபத்துகளில் 6 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-01-16 21:41 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வேகமாகச் சென்ற இரு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பாஸ்னியா என்ற கிராமத்துக்கு அருகில் நடந்த இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்தார்.

விபத்தில் பலியான 4 பேரும் 25 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள். மகர சங்கராந்தி விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிவிட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் சுமார் 3 மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

காண்ட்வா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். எதிரே வந்த ஒரு லாரி மீது அந்த மோட்டார்சைக்கிள் மோதியதில், அதில் சென்ற இருவரும் பலியாகிவிட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்