சித்தூரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, 20 பேர் காயம்

சித்தூரில் டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-12-08 10:07 GMT

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூரில் டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். புதலாபட்டு மண்டலம் லட்சுமையா கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புதலாபட்டில் நடைபெறும் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் 26 பேர் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சுரேந்திர ரெட்டி (52), வசந்தம்மா (50), ரெட்டம்மா (31), தேஜா (25), வினீஷா (3), தேசிகா (2) என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 19 பேர் சித்தூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் சித்தூர் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு, தேவையான மருத்துவ சேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்