தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட 5 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஹலகூரில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த 5 காட்டுயானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Update: 2022-09-19 18:45 GMT

ஹலகூர்:

காட்டுயானைகள்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூரை அடுத்த பசவனபெட்டா வனப்பகுதியையொட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. பசவனபெட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 5 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.

இதனை தடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் நேற்று பீமனகிண்டி வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஹலகூர் பகுதியில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்தது.

பரபரப்பு

அங்கு விளைபயிர்களை மிதித்து சேதப்படுத்திய காட்டுயானைகள் பின்னர் பசவனபுரா வழியாக பசவனபெட்டாவிற்கு சென்றது. பின்னர் அங்கிருந்து குந்தாபுரா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற யானைகள், வனத்துறை அதிகாரியின் அலுவலகத்தின் பின்புறம் இருந்த விளை நிலத்திற்குள் முகாமிட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி பசவனபெட்டாவில் இருந்து குந்தாபுரா வழியாக கப்பாலு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் பசவனபெட்டா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்