குஜராத்தில் ரூ.1½ கோடி கஞ்சா மாத்திரைகள் பறிமுதல் 5 பேர் கைது
1,300 கிலோ மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் பஸ்சில் இருந்த 3 பேரை கைது செய்தனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் பாரூச் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது உத்தரபிரதேசத்தில் இருந்து சூரத்தை நோக்கி தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பஸ்சை நிறுத்தி சோதனை போட்டனர்.
அதில் கஞ்சா மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,300 கிலோ மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் பஸ்சில் இருந்த 3 பேரை கைது செய்தனர். மேலும் சூரத்தை சேர்ந்த 2 பேர் இதில் சிக்கினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மாத்திரைகள் மதிப்பு சுமார் ரூ.1½ கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.